செப்.19:சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதுமுக நடிகை ஒருவர், நண்பர்களுக்கு உருக்க மான எஸ்எம்எஸ் அனுப் பியும், காதலன் குறித்தும் டைரியில் விரிவாக எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இவர் வாய்தா, துப்பறிவாளன் படங்களில் நடித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. இதுதொடர் பாக,
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் புது முக நடிகையாக இருந்தவர் தீபா என்கிற பவுலின் (29). ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு இந் திரா நகரில் தீபாவின் பெற் றோரான தந்தை அமலநா தன்(47), தாய் ராணி (45), சகோதரர் ரமேஷ் (33) ஆகி யோர் வசித்து வருகின்ற னர். புதுமுக நடிகையான நடிகையான தீபா வாய்தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். விஷாலின் துப்பறிவாளன் படத்தி லும் நடித்துள்ளார். இதில் வாய்தா படம் கடந்த மே மாதம் வெளியானது.
விஷாலின் துப்பறிவாளன்
இதை தொடர்ந்து பல புது படங்க ளில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தார். சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வருடங்களாக பவுலின் ஜெசிகா இருந்தார்.
இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (28) என்பவர், நேற்று முன்தினம் மாலை, நண்பரும் நடிகையுமான பவுலினை பார்க்க அவர் வீட்டுக்கு வந்தார். அப் போது வீட்டு கதவு உள்பக்க மாக பூட்டப்பட்டு இருந் தது. எனவே, பலமுறை கதவை தட்டி பவுலினை அழைத்துள்ளார். உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பவுலின் சகோதரர் ரமேஷ் மற்றும் அவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித் தனர். அதன்பே ரில், சென்னை விருகம்பாக்கம் வந்த அவர்கள் தீபாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர், ரமேஷ் போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், தீபாவின் வீட்டை சோத னையிட்டனர். அதில், அவரது செல்போன் மற் றும் டைரி சிக்கியது. செல் போனில் இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது நண் பர்களுக்கு “இந்த உலகத்தில் தனக்கு வாழ பிடிக்க வில்லை, தனக்கு யாரும் ஆதரவாக இல்லை, எனவே, நான் தற்கொலை செய்து கொள் ளப்போகிறேன் என்று எஸ்எம் எஸ் அனுப்பி உள்ளார். மேலும், ஆந்தி ராவில் உள்ள தனது பாட்டி மற்றும் நண் பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். டைரியில், “கடந்த ஒரு வரு டமாக நான் ஒருவரை உயி ருக்கு உயிராக காதலித்து வந்தேன். ஆனால் அவர் என் காதலை ஏற்க மறுத்து வந்தார். இதனால் விரக்தி அடைந்தேன். எனவே, இந்த உலகில் வாழ பிடிக் காமல் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன். எழுதி இருந்தார்.
இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீ சார், செல்போனில், இவர் கடைசியாக யார் யாருடன் பேசினார். இவரது காத லன் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோத னைக்கு பின்னர், அவரது சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், தங்கள் மகள் சடலத்தை அவர்கள் சொந்த ஊரான ஆந்திராவிற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை யும், பரபரப்பையும் ஏற்ப டுத்தியுள்ளது.