தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, இதை செய்தால் தான் நலத்திட்டம் அனைத்தும் கிடைக்கும்??

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..., இதை செய்தால் தான் நலத்திட்டம் அனைத்தும் கிடைக்கும்??
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, இதை செய்தால் தான் நலத்திட்டம் அனைத்தும் கிடைக்கும்??

தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு கடந்த ஏப்ரல் மாத இறுதியுடன் முடிந்த நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, அரசு பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 17 ம் தேதியை மாணவர் சேர்க்கையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மே மாத தொடக்கத்திலேயே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை மட்டும் 60 ஆயிரத்துக்கு மேலாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்க சில நாட்களே உள்ளதால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாநில கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், அனைத்து அரசு பள்ளிகளும் கடந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மாற்று சான்றிதழ் குறித்த விவரங்களை வரும் மே 31ம் தேதிக்குள் கல்வி மேலாண்மை தகவல் முகமையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இனிதே நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் 2 காதல் ஜோடி திருமணம்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

மேலும், ஜூன் 13ம் தேதிக்குள் 1 முதல் 8 வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த பதிவேற்ற படி தான், மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5 மற்றும் 8 ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குவதுடன் அவர்கள், அடுத்த வகுப்பில் சேர்ந்து உள்ளார்களா என்பதை பள்ளி நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை, பள்ளி நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *