கிடு கிடு வென உயர்ந்த வாழைஇலை rs -1800-4கம் தேதி வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கட்டு வாழைஇலை 1,800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு தலைவாழை இலை ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் ஆண்டிப்பட்டி. மதுரை, வேலூர், தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி, ஆந்திர மாநிலம் வத்தலகுண்டு, கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுக்கள் வருகிறது. வழக்கமாக எட்டு அல்லது ஒன்பது லாரிகள் மூலம் வாழை இலைகள் வருகின்றன.
வரும் நான்காம் தேதி ஆயூதபூஜையை முன்னிட்டு இன்று காலை கூடுதலாக 11லாரிகளில் வாழை இலைகட்டுக்கள் வந்துள்ளது. வாழைஇலை வாங்க வியாபாரிகளும் பொது மக்களும் அதிகமாக வரு கின்றனர். இதன் காரணமாக இன்று ஒருகட்டு வாழைஇலைகள் 1,800ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஒருதலை வாழை 5ரூபாய்க்கு விற்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ளசில்லறை வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைஇலைகளை வாங்கி கொண்டு சில்லறை கடைகளில் ஒருகட்டு வாழை இலை 2,000க்கு விற்பனை செய்வதுடன் ஒரு தலைவாழை இலை 10க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து வாழைஇலை வியாபாரி சந்திரசேகர் கூறும் போது, ‘’தினசரி மார்க்கெட்டில் ஒரு கட்டுவாழை இலை 500-க்கும் ஒரு தலை வாழைஇலை ரூபாய்க்கு 2-க்கும் விற்பனை செய்யப் படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை 1,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். இன்னும்சில நாட்களில் வாழைஇலை கட்டு விலை உயரும்’ என்றார்.

வாழைக்காய் மற்றும் வாழைத்தண்டுஇம் விலை உயர்ந்த்து
நவராத்திரி சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை நாட்களில் நல்ல விலை கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் ஒரே நேரத்தில் வாழைத்தார்கள் வெட்டியதால் சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தது. நல்ல விளைச்சல் உள்ள செவ்வாழைத்தார் ரூ.1000 – ரஸ்தாளி ரூ- 600, பூவன் -400 கற்பூரவள்ளி -600 க்கு விற்றது. நாட்டுக்காய் ரூ-400, ஒட்டுநாடு ரூ-300க்கு ஏலம் எடுக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு தட்டுப்பாடு இன்றி வாழைத்தார்கள் கிடைத்ததால் அதிக அளவில் விற்பனையாகின.