ஒரே நைட்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.., இரண்டாவது தடவையும் கைவிட்ருச்சு.., வடிவுக்கரசியின் உருக்கமான பேட்டி!!

ஒரே நைட்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.., இரண்டாவது தடவையும் கைவிட்ருச்சு.., வடிவுக்கரசியின் உருக்கமான பேட்டி!!
ஒரே நைட்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.., இரண்டாவது தடவையும் கைவிட்ருச்சு.., வடிவுக்கரசியின் உருக்கமான பேட்டி!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை வடிவுக்கரசி. இவர் ”கன்னிப்பருவத்திலே” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படி இவரது 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதுபோக சின்னத்திரையில் களமிறங்கி ஏகப்பட்ட சீரியல்களில் வில்லியாகவும், அம்மாவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தன் வாழ்வில் நடந்த சில கசப்பான தருணங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் 17 வயதாக இருந்தபோது தொழிலில் நடந்த நஷ்டத்தால் ஒரே இரவில் சொத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறை., முழு விபரம் உள்ளே!!

இதன் பிறகு என் திருமண வாழ்க்கையில் சரியில்லாமல் போனதால் ஒரு பெண் குழந்தையோடு தவித்து வந்தேன். அப்போது என் அம்மா தான் என்னையும், என் மகளையும் பார்த்துக்கொண்டு எனக்கு ஆறுதலாக இருந்தார். இதன் பிறகு எல்லோரின் வற்புறுத்தலின் பெயரில் ஒருவர் மீது 2வது முறையாக காதல் தோன்ற, கடைசியில் அவரும் என்னை ஏமாற்றி விட்டார். இப்படி என் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு நான் செய்த திருமணம் தான் என உருக்கமாக வடிவுக்கரசி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *