ஒன்றாக சுற்றி உல்லாசம்..கசந்துபோன கள்ளகாதல்.. மிரட்டிய பெண் ஊழியரால் மிரண்ட துணிக்கடை உரிமையாளர்
பெங்களூர்: பெங்களூரில் துணிக்கடையில் பணியாற்றும் பெண்ணுக்கும், உரிமையாளருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்த நிலையில் தற்போது இது போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
தற்போது டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் லிவ் இன் ரிலேஷன்ஷிப், கள்ளக்காதல் விவகாரங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது.
மேலும் இதுதொடர்பாக சிலர் மிரட்டி பணம் பறிப்பதோடு, போலீசில் பலாத்கார புகார்களையும் வழங்குகின்றனர். அந்த வகையில் பெங்களூரில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
பெங்களூரில் வசித்து வருபவர்
பெங்களூரில் வசித்து வருபவர் விக்ரம். இவர் பெங்களூர் உப்பார்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பெண் ஒருவரை அவர் பணிக்கு அமர்த்தினார். இந்த பெண் கடந்த 2 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். விக்ரமிடம் அந்த பெண் நம்பிக்கையை பெற்றார். இந்நிலையில் தான் குடும்ப கஷ்டத்தை சுட்டிக்காட்டிய அந்த பெண், விக்ரமிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டார். இதையடுத்து விக்ரமும் ரூ.2 லட்சத்தை அவருக்கு வழங்கினார்.
கொடுத்த பணத்தை விக்ரம் திரும்ப கேட்டபோது விரைவில் தருவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் இருவருக்கும் இடையேயான உறவு என்பது இன்னும் நெருக்கமானது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பி உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது வெளியே ஒன்றாக சென்று வந்துள்ள நிலையில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வாங்கிய கடனை அந்த பெண் விக்ரமிடம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விக்ரம், பணம் பற்றி கேட்டுள்ளார். இந்த வேளையில் பணம் கொடுக்க அந்த பெண் விரும்பவில்லை. அதோடு அவர் விக்ரமை மிரட்ட துவங்கினார். தன்னிடம் வழங்கிய ரூ.2 லட்சத்தை கேட்டால் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு பற்றி குடும்பத்தினரிடம் கூறிவிடுவதாக தெரிவித்தார். குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தனது மானம் போய்விடும் என விக்ரம் நினைத்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் பயந்துபோன விக்ரம் பணம் கேட்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அந்த பெண் மீண்டும் விக்ரமிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் செய்வதறியாது திகைத்த விக்ரம் சம்பவம் குறித்து உப்பார்பேட்டைபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.